2019 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில், பெட்ரோ கிவிட்டோவா டேனிலி ரோஷ் கோலின்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார். 

இன்று காலை நடந்த பெண்ளுக்கான அரையிறுதி ஆட்டமான இப் போட்டியில் செக்குடியரசுவை சேர்ந்த 8 ஆம் நிலை வீராங்கனை பெட்ரா கிவிட்டோவா அமெரிக்க வீராங்கனையான டேனிலி ரோஸ் கோலின்ஸ் எதிர்த்தாடினார்.

இதில் கிவிட்டோவா 7-6 (7-2), 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 

2 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற அவர் முதல் முறையாக அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். 

அவர் இறுதிப் போட்டியில் பிளிஸ்கோவா (செக்குடியரசு) அல்லது ஒசாகாவுடன் (ஜப்பான்) மோதுகிவுள்ளார்.

இந் நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று பிற்பகல் நடைபெறும் அரையிறுதியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சந்திக்கவுள்ளார்.