போதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தொடர் நடவடிக்கைகளுக்கமைய பாடசாலை மாணவர்களால் விழிப்புணர்வு பேரணியொன்று யாழில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் யாழ்ப்பாணம் சென்.ஜேம்ஸ் மகளீர் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் பேரணி நடாத்தப்பட்டது. பாடசாலை முன்றலிலில் ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணி சின்னக்கடை வீதியுடாக கடற்கரை வீதியைச் சென்றடைந்து பிரதான வீதியூடாக பாடசாலையை வந்து நிறைவடைந்திருந்தது.  இப் பேரணியில் மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்துள்ள போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைக்கு அமைய பாடசாலை மாணவர்களினால் வழிப்புணர்வு பேரணிகள் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.