சர்ப்ராஸ் அகமட்டின் இனவெறி பேச்சு குறித்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவருக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி டர்பனில் இடம்பெற்றது. இப் போட்டியில் தென்னாபிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப் போட்டியின் போது  தென்னாபிரிக்க வீரர் பெலக் வாயோவை பாகிஸ்தான் அணித் தலைவர் சர்ப்ராஸ் அகமட் இனவெறியுடன் பேசியது ஸ்டம்ப் மைக்கில் தெளி­வாகக் கேட்­ட­தாக ஊட­கங்கள் தெரி­விக்­கின்­றன.

இதன்போது அவர் “ஹேய் கருப்புப் பயலே.. உன் அம்மா எங்கு இன்று உட்­கார்ந்­தி­ருக்­கிறாள்? உனக்­காக என்ன வேண்­டிக்­கொள்ள அவ­ரிடம் கூறினாய்?” என உருது மொழியில் தெரிவித்தார்,

அவர் என்ன கூறினார் என்று வர்­ண­னையில் இருந்த ரமீஸ் ராஜா­விடம் கேட்ட போது, “பெரிய வாக்­கி­ய­மாக இருக்­கி­றது, மொழி­பெ­யர்ப்­பது கடினம்” என்று நழு­வி­விட்டார்.

சர்ப்ராஸ் அகமட்டின் இனவெறியுடனான இப் பேச்சு குறித்து சர்வதேச கிரிக்கெட் நிறுவனம் (ஐ.சி.சி.) விசாரணை நடத்துகிறன்ற வேளையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சர்ப்ராஸ் அகமட்டுக்கு 4 முதல் 8 வரை சஸ்பெண்டு புள்ளிகள் வழங்கப்படும்.

2 சஸ்பெண்டு புள்ளி பெறும் வீரருக்கு ஒரு டெஸ்ட் போட்டி அல்லது ஒரு நாள் போட்டிக்கு தடை விதிக்கும் வகையில் விதி உள்ளது. 

இந் நிலையில் சர்ப்ராஸ் அகமட் தனது டுவிட்டர் பக்கத்தில், எனது பேச்சு மூலம் யாராவது மனம் புண்பட்டு இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் யாரையும் குறிப்பிட்டும் நேரடியாகவும் எனது வார்த்தைகளை கூறவில்லை என்று தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.