மன்னார் கடற்பிராந்தியத்துக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்ற நிதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மன்னார் கடற்பிராந்தியத்துக்குள் அத்துமீறி இந்திய இலுவைப்பகுகள் மூலம் மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து 44 இந்திய மீனவர்கள் வெவ்வேறு தினங்களில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடமும் மன்னார் பொலிஸாரிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் 21 இந்திய மீனவர்களுக்கு எதிராக கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் தனித்தனியாக மூன்று வழக்குகளையும் 06 சிறுவர்கள் உட்பட 23 இந்திய மீனவர்களுக்கு எதிராக மன்னார் பொலிஸார் ஒரு வழக்கையும் செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று மன்னார் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்போது, மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஐா இவர்களில் 06 சிறுவர்களையும் மன்னார் சிறுவர் பராமரிப்பு நிலையத்திலும் ஏனையோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.