கடந்த 2018 ஆம் ஆண்டு ரயில்வே திணைக்களம் மூலம்  சுமார் 78 இலட்சத்து 27 ஆயிரத்துக்கும் அதிகமான தொகை அபராதமாக விதிக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

டிக்கெட் சம்பந்தமான விடயத்தில் மிக அதிகமான தொகை அபராதமாக பெறப்பட்டுள்ளதாக அதன் பாதுகாப்பு கண்காணிப்பாளர் அநுர பிரேமரத்ன  தெரிவித்துள்ளார்.

ரயில் டிக்கெட் இல்லாமல் மற்றும் உரிய ரயில் பெட்டிகளில் பயணிகள் பயணம் செய்யாத குற்றத்திற்காக  76 இலட்சத்து 33 ஆயிரத்து 400 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரயிலில் அனுமதியற்ற வகையில் வர்த்தகத்தில் ஈடுபட்ட 195 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் அதிகாரி தெரிவித்துள்ளார்.