2019 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்சை கரோலினா பிளிஸ்கோவா வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான காலிறுதிப் போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனைகள் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும் பலப்பரீட்சையில் நடத்தினர்.

இதில் முதல் இரு செட்டுகளை இருவரும் தலா ஒன்று வீதம் வசப்படுத்தியிருந்த நிலையில் இறுதி செட்டில் அனுபவசாலியான செரீனா வில்லியம்ஸ் 5-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று முன்னிலை வகித்தார். எனினும் அதன் பின் பிளிஸ்கோவா 6-4, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று செரீனாவுக்கு அதிர்ச்சியளித்தார்.

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொரில் முதல்முறையாக அரை இறுதிக்கு பிளிஸ்கோவா முன்னேறியுள்ளமை இதுவவே முதன் முறையாகும்.

மற்றொரு கால்இறுதியில் அமெரிக்க ஓபன் சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா 6-4, 6-1 என்ற நேர் செட்டில் உக்ரேன் வீராங்கனை ஸ்விடோலினாவை வீழ்த்தினார்.

அத்துடன் இவர் அரையிறுதியில் பிளிஸ்கோவாவை சந்திக்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் வீரர் லுகாஸ் போலே 7-6 (7-4), 6-3, 6-7 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் கனடாவின் மிலோஸ் ராவ்னிக்கை வீழ்த்தி வெளியேற்றினார். 

தரவரிசையில் 30 ஆவது இடம் வகிக்கும் லுகாஸ் போலே ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் அரை இறுதியை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.