சிரியா தலைவர் டமாஸ்கசினில் நான்கு மாடிகளைக் கொண்ட குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 07 சிறுவர்கள் உயிர் கருகி உயிரிழந்துள்ளனர்.

எதிர்பாராத விதமாக அந்த வீட்டில் திடீரென தீப்பிடித்தததுடன் கண் இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. இதனால் மேற்படி 7 சிறுவர்கள் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டு தீயில் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.