அமெரிக்காவின் புளொரிடா மாகாணத்தின் செப்ரிங் உள்ள வங்கியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்படி வங்கிக்குள் நுழைந்த 21 வயதுடைய இளைஞன், திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து, வங்கிக்குள் நின்றோர் மீது சாரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளான். 

இதனால் சம்பவ இடத்திலேயே 05 பேர் உயிரிழந்துள்ளனர். 

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட இளைஞனை கைதுசெய்த பொலிஸார், இந்த சம்பவத்தின் பிண்ணனி காரணம் ஏதும் இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.