இலங்கையில் தடை செய்யப்பட்ட பெருமளவிலான எதனோல் போதைப் பொருள் பாரவூர்தியில் கடத்திச் செல்லப்பட்ட் போது விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
யாழில் ரோந்தில் ஈடுபட்டு வருகின்ற விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையிலையே இப் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது பாரவூர்தி ஒன்றுடன்; 372 எதனோல் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஒவ்வாரு காணும் 21 லீற்றர் கொள்ளளவைக் கொண்டவை என்பதுடன் மொத்மாக 7420 லீற்றர் எதனோல் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பாரவூர்தியுடன் கைப்பற்றப்பட்ட எதனோல் போதைப் பொருளை சுன்னாகம் பொலிஸாரிடம் இன்று விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னடுத்து வருகின்ற சுன்னாகம் பொலிஸார் இப் போதைப் பொருளையும் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டவர்களையும் நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM