கொழும்பையண்டிய சில பிரதேசங்களில் எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 8 மணிவரை 24 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மாஹரகம, பொரலஸ்கமுவ, ஹோமாகம உட்பட புறநகர் பிரதேசங்களில் திருத்த பணிகாரணமாக  குறித்த நீர்வெட்டு கொட்டாவ, பன்னிப்பிட்டிய, ருக்மெல்கம, பெலவத்த, மத்தேகொட, மீபே மற்றும் பாணாந்துறை ஆகிய பிரதேசங்களில்  நீர்விநியோகம் தடைப்படுவதால் பொதுமக்களை நீரை சேமித்து வைக்குமாறு முன்னறிவித்தல் ஒன்றை  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ளது.