வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு தொகை மருந்து வில்லைகள், கிரிம் வகைகளை சட்டவிரோதமாக இலங்கைக்குள் கடத்திக்கொண்டு வர முயற்சித்த சந்தேக நபரை சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.  

பாலியல் உணர்வுகளை தூண்டக் கூடிய மருந்து வில்லைகள் மற்றும் மேனி பாரமாரிப்புக்கு  பூசும்  இரவுநேர கிரீம் வகைகளை சட்டவிரோதமான முறையில் மலேஷியாவிலிருந்து இலங்கைக்குள் கடத்திக்கொண்டு வர முயற்சித்த சந்தேக நபரை சுங்க அதிகாரிகள் நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யததாக  சுங்க அதிகாரி சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார். 

கம்பஹா - உடுகம்பொல பிரதேசத்தை  சேர்ந்த  62 வயதான வியாபாரியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

    குறித்த சந்தேக நபர் நேற்று மாலை 5 மணியளவில் மலேஷியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தேபோது கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல முற்பட்டவேளை, அவரின்  நடத்தையில் சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள், குறித்த நபரின் பயணப்பொதியை சோதனையிட்டபோது ஒரு தொகை மருந்து வில்லைகள் மற்றும் ஒரு தொகை கிரீம்வகைகளை கைப்பற்றியுள்ளனர். 

 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.