பாராளுமன்றம் இன்று காலை 10:30 மணியளவில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

இந் நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கையின் அழுத்தங்கள் நாட்டில் அதிகரித்து வருகின்ற நிலையில் மேற்படி விவகாரம் தொடர்பில் இன்றைய தினம் பாராளுமறத்தில்  முழுநாள் விவாதம் இடம்பெறவுள்ளது. 

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதற்கான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சபையில் முன்வைக்கவுள்ளார்.  

இதே‍வேளை 31 அமைச்சர்களின் ஆலோசனை தெரிவுக்குழுக்களுக்கான அனுமதியை கோரும் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.