வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்து, அவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஏழு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்களே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.