பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் 1000 ரூபாய் இயக்கம் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பஸ் நிலையத்தில் இன்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ‘தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாயாக மாற்று’, ‘கம்பனிகளே தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டாதே’, ‘அரசே மலையக தொழிலாளர்களைத் தொடர்ந்தும் ஏமாற்றாதே’ உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாயாக உயர்த்துமாறு வலியுறுத்தி நாடாளாவிய ரீதியில் இன்று பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.