தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தினை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்புச் செய்யக் கோரிவரும் தோட்டத் தொழிலாளர்களின் கோரிகைக்கு ஆதரவு தெரிவித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று(23 )மாலை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெற்றது.

பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஆரம்பமான மாணவர் பேரணி அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி வரைச் சென்றடைந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகள் சகிதம் மாணவர்கள் சம்பள அதிகரிப்பினை வலியுறுத்திய கோசங்களை எழுப்பினர்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக் கோரிக்கையானது நியாய பூர்வமானது எனவும், இத்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கிட்டும் வரை தமது ஆதரவினை தொடர்ச்சியாக வழங்கி எமது மாணவர் பேரவையின் அழுத்தங்களையும் அனைத்துத் தரப்பினருக்கும் வழங்க சித்மாய் உள்ளோம் என கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.