(நா.தினுஷா) 

சேனா படைப்புழுவினால் பாதிப்படைந்துள்ள விவசாயிகளுக்கு ஒரு ஏக்ருக்கு 40 ஆயிரம்  ரூபா நிவாரணம் பெற்றுக்கொடுப்பதை ஏற்க்கொள்ள முடியாது எனத் தெரிவித்த  முன்னிலை சோசலிஷ கட்சியின் உறுப்பினர் புபுது ஜெயகொட, அவர்கள் பெற்றுக்கொண்ட கடன்களுக்கு ஏற்ற நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சேனா படைப்புழுவின் தாக்கம் அடையாளம் காணப்பட்டதுடன் இந்த புழுவின் தாக்கம் இலங்கை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்பட்ட போதிலும் சேனாவின் தாக்கத்தை கட்டுப்படத்த நடவடிக்கை எடுக்காமைக்கு காரணத்தையும் தற்போது நிலை தீவிரமடைந்துள்ள சந்தர்ப்பத்திலும் அவசர நடவடிக்கை எடுக்காமை குறித்தும் அரசாங்கம் விரைவாக பொருப்பு கூற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சேனா படைபுழுவின் தாக்கத்தால் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்தும், இது தொடர்பான அரசாங்கத்தின் பொருப்பு குறித்தும் விளக்கமளிக்கும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சி காரியாலயத்தில் இடம்பெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.