நான் முட்டாள்களையும், இனவாதிகளையும் கணக்கில் எடுப்பதில்லை. யார் என்னை போற்றினாலும், தூற்றினாலும் எனது மனச்சாட்சிக்கு அமைவாகவே செயற்படுகின்றேன் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மடு பிரதேச செயலகத்தில் இன்று இடம் பெற்ற வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் இந்த விஜயத்தின்போது மடு திருத்தலத்திற்கு சென்று மடு பரிபாலகரை சந்தித்ததோடு, மடு அன்னையை தரிசித்து ஆசி பெற்றார்.

அதனை தொடர்ந்து மன்னார் நகர மண்டபத்துக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், மன்னார், மாந்தை மேற்கு, நானாட்டான் மற்றும் முசலி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 198 பயணாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளையும் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளையும் வழங்கி வைத்தார்.