(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவும் இணைந்தே இன்று வழக்குகளை தடுக்கும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். யாருடைய வழக்கு எப்போது எடுக்க  வேண்டும் யாரை காப்பாற்ற வேண்டும் என்ற அனைத்துமே அவர்கள் கையில் தான் உள்ளது, இவர்கள்  இருவரும் நீதிமன்ற செயற்பாடுகளில் நேரடியாக தலையீடுகின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க சபையில் குற்றம் சுமத்தினார். 

தாஜுதீன், லசந்த கொலைகளை மறைக்க கோதாபய ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து உண்மைகளை மூடி மறைக்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோத்தவை உடனடியாக கைது செய்து குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கடன் இணக்கம் தொடர்பிலான திருத்த சட்ட விவாதத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.