"தனுஷ்வுடன் கைக்கோர்க்க எனக்கு ஆசை" மனம் திறக்கிறார் பிரபஞ்ச அழகி

Published By: Robert

05 Apr, 2016 | 12:32 PM
image

இந்திய சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கும் நடிகை ஷீனா சோஹன். தனுஷின் தீவிர ரசிகையான இவர் ஓர் அனுபவம் மிகுந்த நாடக கலைஞர். "நான்  Anupam Kher பள்ளியில் நடிப்பு பயின்றேன்.

அப்போது தேசிய விருது பெற்ற இயக்குனர் ஜெயராஜ் மூலம் எனக்கு மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது" என்கிறார் நடிகை ஷீனா. மேலும் துபாய், ஷாங்காய் மற்றும் கேரளாவில் நடைப்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், இவருக்கு சிறந்த நடிகைக்கான விருது பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது, பெங்காலி திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் இவர், கதாநாயகி மட்டுமல்லாது ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும்  அனைத்து காதாப்பாத்திரங்களிலும் நடிக்க தயார் என்கிறார். சமகால நடனம் மற்றும் வைலின் இசையில் கைத்தேர்ந்தவரான இவர் ஒரு தேசிய கராத்தே வீராங்கனை என்பது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. மேலும் தனுஷின் நடிப்பால் வியந்துப்போய் நிற்கும் ஷீனா, "தனுஷ், தமிழ் சினிமாவில் மட்டுமில்லாது, பொலிவூட்டிலும் கலக்கி கொண்டிருக்கிறார். அவரது நடிப்பை பார்த்து நான் பலமுறை வியந்ததுண்டு. தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் நுணுக்கம், தனுஷ் அவர்களின் திறமை. இந்த காரணத்தினால் அவருடன் இணைந்து நடிக்க வேண்டுமென்ற எண்ணம் உருவானது", என்கிறார் கொல்கத்தாவின் அழகு புயல் ஷீனா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right