(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று  கட்சிக்கான புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயளகத்தில் நேற்று  இந்த நியமனம் இடம்பெற்றது. 

அதனடிப்படையில், கொழும்பு மாவட்ட தலைவராக திலங்க சுமதிபால, கம்பஹா மாவட்ட தலைவராக லசந்த அழகியவண்ண, களுத்துறை மாவட்ட தலைவராக  மஹிந்த சமரசிங்க, காலி மாவட்ட தலைவராக ஷான் விஜேலால் டி சில்வா, கண்டி மாவட்ட தலைவராக  எஸ்.வி.திஸாநாயக்க, கேகாலை மாவட்ட தலைவராக ரஞ்சித் சியாம்பலாப்பிட்டிய,

மாத்தறை மாவட்ட தலைவராக விஜய தசநாயக்க, அம்பாந்தோட்டை மாவட்ட தலைவராக  மஹிந்த அமரவீர, குருணாகல் மாவட்ட தலைவராக தயாசிறிஜய சேகர, பதுளை மாவட்ட தலைவராக நிமல் ஸ்ரீ பால டி சில்வா, அனுராதபுரம் மாவட்ட தலைவராக துமிந்த திஸாநாயக்க, அம்பாறை மாவட்ட தலைவராக ஸ்ரீயானி விஜே விக்ரம , யாழ் மாவட்ட தலைவராக அங்கஜன் இராமநாதன், மாத்தளை மாவட்ட தலைவராக லக்ஷ்மன் வசந்த பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.