(ஆர்.விதுஷா)

அளுத்கமை - மொரகல்ல கடற்பரப்பில் நீராட சென்ற வெளிநாட்டு பிரஜையொருவர்  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

குறித்த வெளிநாட்டுப்பிரஜை நேற்று மாலை 6.40 மணியளவில் மொரகல்ல கடற்பரப்பில் நீராடச்சென்றுள்ளார். அந்த சமயம்  கடல் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் நீரில் மூழ்கியுள்ளார். 

இவ்வாறு  நீரில் மூழ்கிய வெளிநாட்டு பிரஜை  மீட்கப்பட்டு பேருவளை வைத்திய சாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர்  58 வயதடைய பிரான்ஸ் நாட்டை  சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக  பொலிசார்  தெரிவித்தனர். 

மேலும் உயிரிழந்த வெளிநாட்டு பிரஜையின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுத்துறை நாகொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன்.  

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கமை பொலிசார்  மெற்கொண்டு வருகின்றனர்.