இந்தோனேஷியா - ஜகார்த்தாவில் அமைந்துள்ள  உள்நாட்டு விமானநிலையத்தில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று நேற்று இரவு மோதுண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளன.

பறக்கவிருந்த பயணிகள் விமானத்தோடு விமான ஓடு பதையின் ஊடாக இழுத்து செல்லப்பட்ட விமானமொன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

எனினும் இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.