இந்தியா, ஆந்திராவில் மனித உடலுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கச் சென்ற வண்ணம் உள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

ஆந்திராவின் புங்கனூரில் உள்ள பி.டிகாலனியைச் சேர்ந்த அயூப் என்பவர் வளர்த்து வந்த ஆடுகளில் ஒரு ஆடு குட்டி ஒன்றை ஈன்றுள்ளது.

இந்த குட்டி மனித உடலுடனும், ஆட்டு தலையுடனும் காணப்பட்டது. இந்த அதிசய ஆட்டுக்குட்டி குறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து ஆட்டு குட்டியை பார்த்துச்சென்றனர். ஆனால் பிறந்த சில மணி நேரத்தில் ஆடும், விநோத ஆட்டிக்குட்டியும் இறந்து விட்டமையானது மிக கவலையான விடயமாகும்.