வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று குற்றத் தடுப்பு விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார். 

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிரான கொலை சதித் திட்டம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய பிரஜை வெளியிட்ட தகவலுக்கு அமையவே நாமல் ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரிடமும் கொலை சதி திட்டம் தொடர்பில் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குற்றத் தடுப்பு விசாரணை திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.