பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படப்பிடிப்புக்காக அவர் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார்.இந்நிலையில்,நடிகை பிரியங்கா சோப்ரா 3 முறை தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது  33 வயது நடிகையான பிரியங்கா சோப்ரா பற்றி அவரது முன்னாள் முகாமையாளர் பிரகாஷ் ஜாஜூ பரபரப்பு தகவலை வெளியிட்டு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,

இப்போது மிகவும் பலமானவராக எல்லோருக்கும் முன் இருக்கும்  பிரியங்கா சோப்ரா இருக்கிறார். ஆனால், அவருக்கு நேர்ந்த இக்கட்டான நாட்களில் அவர்  3 முறை தற்கொலைக்கு முயன்றார். பிரியங்கா சோப்ராவின் காதலன் அசீம் மெர்சண்ட்டின் தாய் இறந்ததை தொடர்ந்து, ஒரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும்  அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றபோது, நான் தான் அவரை தடுத்து நிறுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த பரபரப்பு தகவலை வெளியிட்ட பிரகாஷ் ஜாஜூ, நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு 2000–ம் ஆண்டு முதல் 2004–ம் ஆண்டு வரை முகாமையாளர்  இருந்தவர். தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை வழங்கவில்லை என்று கூறி பிரியங்கா சோப்ரா மீது வழக்கு தொடர்ந்தார். இந்த தகராறு முற்றியதால், பிரியங்கா சோப்ராவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் பிரகாஷ் ஜாஜூ 67 நாட்கள் சிறை வாசம் அனுபவித்தமை  குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பிரகாஷ் ஜாஜூக்கு பிரியங்கா சோப்ராவின் தாய்  பிரகாஷ் ஜாஜூ விளியிட்ட கருத்து குறித்து  கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘எனது மகள் தற்கொலைக்கு முயன்றதாக கூறும் பிரகாஷ் ஜாஜூ ஒரு பொய்யர். சிறையில் இருந்தபோது அவரது தாய்–தந்தை எனது மகளின் காலில் விழுந்து மன்றாடியதை நினைத்து பார்க்க வேண்டும்’’ என்றார்.