நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களினால் இலகுவாக வெற்றி பெற்றுள்ளது.

ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று நியூஸிலாந்தின், நேப்பியரில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் முதலாவதாக துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.

அதன்படி முதலாவதாக களமிறங்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 38 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

158 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி சார்பாக தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஆரம்ப வீரர்களாக ஆடும்களம் நுழைந்து துடுப்பெடுத்தாடிய போது 9.2 ஆவது ஓவரில் ரோகித் சர்மா 11 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அவரின் வெளியேற்றத்தையடுத்து இந்திய அணித் தலைவர் தவானுடன் கைகோர்த்தாட இந்திய அணி 10 ஓவர்களின் நிறைவில் 43 ஓட்டங்களை பெற்ற, ஆடுகளத்தில் சூரிய ஒளியின் தாக்கம் காரணமாக போட்டி சிறிது நேரத்துக்கு தடைப்பட்டது. 

இதன் பின்னர் தொடர்ந்து தவான் மற்றும் விராட் கோலி ஆடுகளம் நுழைந்து நியூஸிலாந்து அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை அனைத்து திசைகளிலும் அடித்தாட இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை 15 ஓவருக்கு 76 ஆக அதிகரித்தது.

தவான் 40 ஓட்டத்துடனும், விராட் கோலி 17 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வர இந்திய அணி 100 ஓட்டங்களை தொட்டது. 

22.5 ஆவது ஓவரில் 61 பந்துகளை எதிர்கொண்ட தவான் 6 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அரை சதம் கடந்தார். இந் நிலையில் 28.4 ஆவது ஓவரல் விராட் கோலி லொக்கி பெர்க்சனின் பந்து வீச்சில் 45 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

விராட் கோலியின் வெளியேற்றத்தையடுத்து அம்பத்திய ராயுடு 2 ஆவது விக்கெட்டுக்காக ஆடுகளம் நுழைந்தாட இந்திய அணி 34 ஆவது ஓவரில் 150 ஓட்டங்களை குவித்ததுடன், 34.5 ஆவது ஓவரில் நியூஸிலந்து அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

ஆடுகளத்தில் தவான் 75 ஓட்டத்துடனும், ராயுடு 13 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்  இந்தியா 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.