பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரி இன்று நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன..

அந்தவகையில், மற்றுமொரு ஆர்ப்பாட்டம் ஹட்டன் நகரத்திலும் 1000 ரூபாய் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.

தொழிலாளர்கள் தினமும் உழைக்கும் உழைப்புக்கு அடிப்படை ஊதியமாக ஆயிரம் ரூபாயை வழங்கு என முதலாளிமார் சம்மேளனத்துக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாகவே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன் பஸ் நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100ற்கும் மேற்பட்ட  மக்கள் பதாதைகளையும், கறுப்புக் கொடிகளையும் ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“முதலாளிமார் சம்மேளனம் தோட்டத் தொழிலாளிடம் வேலையை மட்டும் வாங்காதே? தோட்டத் தொழிலாளர்களையும் கண் விழித்துப்பார். தோட்ட மக்களைக் காலால் மிதிக்காதே? உடனடியான தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கு? என்று பல்வேறு கோஷங்ளை எழுப்பி இந்த ஆர்ப்பாட்டத்தை சுமார் ஒரு மணித்தியாலயம் வரை முன்னெடுத்தனர்.