பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்தக்கோரி பதுளை, அப்புத்தளைப் பகுதியின் ககாகொல்லை, கோணமுட்டாவை, பங்கட்டி, தம்பேதன்னை ஆகிய தோட்டங்களிலும் இன்று புதன்கிழமை  மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

குறித்த போராட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு கேசங்களை எழுப்பியவாறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மேற்படித் தோட்டங்களின் தொழிலாளர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்புக்களிலும் இன்றைய தினம் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.