பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல் நலக்குறைவு காரணமாக லாகூரிலுள்ள பஞ்சாப் இருதய நோய் வைத்தியக் கல்லூரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அல் -அஸிஸியா இரும்பு ஆலை ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறைச்சாலையில் அடைக்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.