ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் 9 பேர் மராட்டிய பயங்கரவாத தடுப்பு படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அம்ருத் நகர், கவுசா, மோடி பக், அல்மாஸ் காலனி ஆகிய இடங்களில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சோதனையின் போது இரசாயனங்கள், ஆசிட் போத்தல்கள், கூர்மையான ஆயுதங்கள், கையடக்கத் தொலைபேசிகள், வன் தட்டுகள் (ஹார்டு டிஸ்), சிம் அட்டைகள் போன்றவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.  

கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றச் சதி நடவடிக்கையின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.