வவுனியா இலுப்பையடிப்பகுதியில் அமைந்திருந்த பௌத்தர்களின் யாத்தரிகை விடுதி இன்று முதல் புனரமைப்பு செய்யப்பட்டு பௌத்த இளைஞர் சங்கம் என்ற பெயரில் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக பௌத்த யாத்திரிகைகள் விடுதி என்ற பெயரில் செயற்பட்டு வந்துள்ள குறித்த நிலையம் இன்று முதல் அவசர அவசரமாக புனரமைப்புச் செய்யப்பட்டு பௌத்த இளைஞர் சங்கம் என்ற பெயரில் புனரமைப்பு செய்து வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வைத்தியசாலை சுற்றுவட்டம், இலுப்பையடி போன்ற பகுதிகளில் பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.