(ஆர்.விதுஷா)

ஹெரோயின்  போதைப்பொருளுடன்  இளைஞரொருவர்  கைது செய்யப்பட்ட நபரை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய  கிராண்ட்பாஸ்  தொடர்மாடி குடியிருப்பு பகுதியில்  நேற்று  முற்பகல்  10 மணியளவில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே  மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்  38 வயதுடைய கொழும்பு -15  பேர்கிசன் வீதி பகுதியைச் சேர்ந்த என விசாரணையின்போது  தெரியவந்துள்ளது.  

அவரிடமிருந்து  10 கிராம்  150 மில்லிகிராம்  ஹெரோயின்  போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில்  சந்தேக நபரை  மாளிகாகந்தை நீதவான் நீதி மன்றத்தில்  ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இன்றைய தினம்  மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.