2019 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்கத் டென்னிஸ் தொடரில் 2 ஆம் நிலை வீரரான ரபேல் நடால் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியோபோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

மெல்போர்னில் நடைபெற்று வரும் இத் தொடரில் நேற்று ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது.

இதில் ஒரு போட்டியில் ரபேல் நடால் பிரான்சிஸ் தியோபாவை  6-3, 6-4, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

அரையிறுதியில் நடால் சிட்ஸிபஸ்ஸை எதிர்கொள்கிறார்.