கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி

Published By: Digital Desk 4

23 Jan, 2019 | 10:58 AM
image

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவகால ஏற்பாடுகள் தொடர்பாக உயர் மட்டக்கலந்துரையாடல் நேற்று  யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவினை எதிர்வரும் மார்ச் மாதம்  15 ஆம் 16 ஆம் திகதி நடத்துவதற்கு சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்முறை கடந்த வருடங்களை போல் 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இம்முறை இந்தியாவிலிருந்தும் அதிகளவான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பக்தர்ககள் இளைப்பாறுவதற்கு நிழல் கூடராங்கள் 70, மற்றும் குடிநீர் தாங்கிகள் 150, மலசலகூட வசதிகள் என்பன கடற்படையினர், மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலகம், பிரதேச சபையினரின் ஒத்துழைப்பில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பக்தர்களுக்கு பல நன்மைகளைத் தரக்கூடியவகையில் இதர செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும் யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகட்டுவான் வரையான போக்குவரத்து சேவையினை இலங்கை போக்குவரத்து சபை மற்றும் இதர போக்குவரத்து சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் படகு சேவைகளும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59