வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி இன்று கவனயீர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலையின் அதிபர் ரம்சீன் தலைமையில் இடம்பெற்ற போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்துரைகளை தொடர்ந்து முஸ்லிம் மகாவித்தியாலய முன்றலில் இருந்து குருமண்காடு சந்திவரை சென்ற ஊர்வலம் மீண்டும் அங்கிருந்து பாடசாலையை வந்தடைந்திருந்தது.

இதன்போது “போதை நாட்டுக்கு கேடு அதை ஒழிக்க ஒன்றிணைவோம்” , “எதிர்கால சந்ததியை வளர்க்க போதையை தடை செய்” , “போதை அது சாவின் பாதை” போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியும் ஊர்வலத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, எம். லிரீப், கிராம சேவகர் அபிவிருத்தி உத்தியோகத்தர், பொலிஸ் உத்தியோகத்தரும் கலந்துகொண்டிருந்தனர்.