(எம்.நியூட்டன்)

யாழ். நகர்ப்பகுதியில் அதிகரித்துவரும் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்த விசேட செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

யாழ்.நகர பகுதிக்குபட்ட நாவாந்துறை, நல்லூர், அரியாலை, வண்ணார் பண்ணை, நல்லூர் போன்ற இடங்களில் டெங்கு நோயின் தாக்கம் என்றுமில்லாதவாறு அதிகரித்துச் செல்கின்றது. 

இதனைக் கட்டுப்படுத்த சுகாதாரத் திணைக்களத்தினால் விசேட செயற்றிட்டம் இன்று புதன்கிழமை, நாளை வியாழக்கிழமை ஆகிய தினங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அன்றைய தினங்களில் தங்களின் சுற்றாடலில் நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவான இடங்கள் உள்ளனவா என பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 

இதன்போது நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவான இடங்கள் இனங்காணப்படின் அதிகரிக்கும் டெங்கு நோயில் இருந்து மக்களை காப்பாற்றும் நோக்கம் கருதி எவ்வித முன்னறிவித்தலுமின்றி சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது.

எனவே அதிகரித்துச் செல்லும் டெங்குநோயினைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பின்வரும் விடயங்களை கருத்திறகொள்வோம்.

அதிகமான இடங்களில் குளிர்சாதனப்பேட்டியின் பின்புறத்தில் காணப்படும் நீர்தேங்கக்கூடிய பகுதியும் நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவான இடங்களில் ஒன்றாக இனங்காணப்பட்டுள்ளது.

தண்ணீர் சேமித்து வைக்கப்படும் தொட்டியும் நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவான இடங்களில் ஒன்றாக இனங்காணப்பட்டுள்ளது.

வீட்டுச் சுற்றாடலில் காணப்படும் தேவையற்ற பொருட்களும் நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவான இடங்களில் ஒன்றாக இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.