ஊழியர் சேமலாப நிதியை பயன்படுத்தி 2016 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியில் பிணை முறி கொள்வனவின் போது இடம்பெற்றுள்ள எட்டு கோடி ரூபா பாரிய நிதி மோசடி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு மேலும் தெரிவித்துள்ளனர்.

ஊழியர் சேமலாப நிதியத்தின் நிதியுதவி மூலம் மத்திய வங்கியின் பிணைமுறி கொள்வனவின் போது 8 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பாக நிதி குற்ற புலனாய்வு பிரிவினால் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.