திருக்கோவில் கடற்கரையில் ஆணின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுதசுவாமி ஆலயத்திற்கு முன்னால் உள்ள கடற்கரையிலேயே குறித்த சடலம் இன்று அதிகாலை கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் 34 வயதுடைய சகாதேவராஜா கிலோஜ்  என்பவருடைதெனவும் அக்கரைப்பற்று  40 ஆவது கட்டையைச் சேர்ந்தவரெனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த நபர் கடந்த 21 ஆம் திகதி கடலில் குளிக்கச்சென்றபோது கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்திருக்கலாமென பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து மேலும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருக்கோயில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.