மதுபோதையினால் ரஷ்ய விமானத்தை கடத்த‍ முயற்சித்த நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சைபீரியாவிலிருந்து மொஸ்கோ நோக்கி சென்று கொண்டிருந்த ரஷ்யாவுக்கு சொந்தமான விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர், மதுபோதையில் விமானத்தை ஆப்கானிஸ்தானுக்கு திரும்பும்படி விமான ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

ஆனால் விமானி அந்த விமானத்தை அவசரமாக காண்டி மான்சிய்ஸ்க் நகரில் தரையிறக்கினார். அந்த விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் அந்த விமானம் நிறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸார் விமானத்தில் ஏறி குறித்த நபரை கைதுசெய்து விமானத்தை கடத்தியதாக வழக்குப் பதிவு செய்தனர்.