மக்கள் தெரிவு நாமமாக  தெரிவாகியுள்ள எலிபன்ட் ஹவுஸ் கிறீம் சோடா

Published By: Priyatharshan

05 Apr, 2016 | 11:21 AM
image

தொடர்ந்து வெற்றி வாகை சூடிய வண்ணமுள்ள எலிபன்ட் ஹவுஸ் கிறீம் சோடா, தொடர்ச்சியான பத்தாவது ஆண்டாகவும், “ஆண்டின் சிறந்த பான வர்த்தக நாமம்” விருதை வெற்றியீட்டியுள்ளது. 

இலங்கை சந்தைப்படுத்தல்  கல்வியகம் (SLIM)மற்றும் நீல்சன் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2016 மக்கள் விருதுகள் வழங்கும் நிகழ்வின் போது இந்த விருது கிறீம் சோடாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. 

2006 ஆம் ஆண்டு மக்கள் விருதுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது முதல், இந்த உயர் விருதை எலிபன்ட் ஹவுஸ் கிறீம் சோடா ஆதிக்கம் செலுத்தி வருகின்றமை குpற்பிடத்தக்கது.

இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகம் (SLIM)மற்றும் நீல்சன் கம்பனி ஆகியவற்றின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் விருதுகள் என்பதன் மூலமாக, நுகர்வோரின் தெரிவுகள் பதிவு செய்யப்பட்டு, அதிகளவு தெரிவைப் பெற்ற நாமங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

பொது மக்கள் இந்த வெற்றியாளர்களை தெரிவு செய்கின்றமையால், தமக்கு விருப்பமான வர்த்தக நாமங்கள், நபர்கள், விளம்பரங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் போன்றவற்றை தெரிவு செய்திருந்தனர். 

வெற்றியாளர்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டிருந்த நேருக்கு – நேர் கருத்துக்கணிப்புகளை நீல்சன் மேற்கொண்டிருந்தது. இதில் 15 – 60 வயதுக்குட்பட்ட ஆண்; மற்றும் பெண் இரு பாலாரும் நாட்டின் சகல மாவட்டங்களிலிருந்தும் ஐந்து மாதங்களுக்கு இவ்வாறு நேர்காணல்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் எலிபன்ட் ஹவுஸ் கிறீம் சோடா என்பது இலங்கையர்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பைப் பெற்ற நாமம் என்பது மட்டுமின்றி, ஏனைய எந்தவொரு பான நாமத்தையும் விட சுமார் ஒரு தசாப்த காலமாக அனைவர் மத்தியில் அதிகளவு விருப்பத்துக்குரிய நாமமாக உள்நாட்டு சந்தையில் திகழ்ந்த வண்ணமுள்ளது. நாடு முழுவதும் நீல்சன் முன்னெடுத்திருந்த கருத்துக்கணிப்பின் மூலம் இது தெரியவந்திருந்தது. 

எலிபன்ட் ஹவுஸ் கிறீம் சோடா 2016 மக்கள் விருதுகள் வழங்கலில் விருதை பெற்றுக் கொண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க விடயம் தொடர்பில் சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் பிஎல்சியின் பானங்கள் பிரிவின் தலைமை அதிகாரியும், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பதில் தலைவருமான தமிந்த கம்லத் கருத்து தெரிவிக்கையில், 

“இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற பானமாக 10 வருட காலமாக எலிபன்ட் ஹவுஸ் கிறீம் சோடா தொடர்ந்து மக்களின் தெரிவாக அமைந்துள்ளது. இவை அனைத்தும் நிலைபேறான வாடிக்கையாளர் அர்ப்பணிப்பு மற்றும் எமது நீண்ட கால மற்றும் புதிய வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சிகரமான ஈடுபாடு போன்றன அமைந்துள்ளன. அவர்களின் தொடர்ச்சியான அன்பு மற்றும் உதவி இன்றி எம்மால் இவை எதையும் முன்னெடுத்திருக்க முடியாது, இதற்காக நாம் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்பள்ளி கல்வியை மேம்படுத்த UNICEFஉடன் இணையும்...

2025-02-06 10:13:01
news-image

விலை உறுதிப்பாடு : தவிர்க்க முடியாததொன்றா?

2025-02-05 18:33:08
news-image

கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

2025-02-05 17:22:13
news-image

இலங்கையின் "சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்" கெசினோ ...

2025-02-05 17:05:26
news-image

சம்பத் வங்கி மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ்...

2025-02-05 11:44:52
news-image

TAGS விருதுகள் 2024 – Prime...

2025-02-05 11:41:48
news-image

வடபிராந்திய முயற்சியாண்மைகளை வலுப்படுத்த டேவிட் பீரிஸ்...

2025-02-03 14:56:40
news-image

‘C'est La Vie’– பிரான்ஸ் நாட்டின்...

2025-02-02 09:41:53
news-image

இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக...

2025-01-30 12:16:32
news-image

VIMAN வீதி கிரிக்கெட் போட்டியை வழிநடத்துவதற்காக ...

2025-01-30 11:55:21
news-image

எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் அதன் பயணச்...

2025-01-29 15:21:43
news-image

30 ஆண்டு நம்பிக்கையைக் கொண்டாடும் Maliban...

2025-01-29 10:01:31