(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

எதிர்க்கட்சித்தலைவர் காரியாலயத்தில் தொங்கவிடப்பட்டிருந்த படங்களை பார்த்து, ரணில் விக்ரமசிங்கவின் 4 படங்கள் இருக்கின்றன. விரைவில் 5 ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ்வை பார்த்து உதய கம்பன்பில எம்.பி. தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டட தொகுதியில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவரின் காரியாலயத்தில் இன்று உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் கடமைகளை ஏற்றுக்கொண்டார். 

இதன்போது அங்கு வைக்கப்பட்டிருந்த ஆவணத்தில் கைச்சாத்திட்டபின்னர் குழுமியிருந்தவர்களை நோக்கி, விரைவில் இந்த  காரியாலயத்தில் இருந்து வெளியேற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார். 

இதன்போது அருகில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில, பாராளுமன்ற வரலாற்றில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர்களின் புகைப்படங்களுடன் அந்த காலப்பகுதியும் தெரிவிக்கப்பட்டு எதிர்க்கட்சித்தலைவர் காரியாலயத்தில் தொங்கவிடப்பட்டிருந்த படங்களை பார்த்து, ரணில் விக்ரமசிங்கவின் 4 படங்கள் இருக்கின்றன. விரைவில் 5 ஆவது படத்தையும் தொங்கவிட வைக்கவேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ்வை பார்த்து தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ், அது விரைவில் இடம்பெறும். அதற்கு தேவையான வேலைத்திட்டங்களை நாங்கள் மேற்கொள்ளவேண்டும். விரைவில் பாராளுமன்றத்தின் இரண்டாம் மாடிக்கு (பிரதமர் காரியாலயத்துக்கு)  செல்ல பிராத்தியுங்கள் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.