முல்லைத்தீவு மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பகுதியில் நேற்று மின்சாரம் தாக்கி 21 நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளளார்.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்துக்குட்பட்ட நட்டாங்கண்டல் கிராமத்திலுள்ள வீடொன்றில் இருந்து இன்னொரு வீட்டுக்கு பாதுகாப்பற்ற முறையில் பெறப்பட்ட மின்சாரத்தில் சிக்குண்டு குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் நட்டாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த 4 வயதுடைய சுந்தரமூர்த்தி நிச்சயன்  என அடையாளம் கானப்பட்டுள்ளது.

இவ்வாறு குறித்த சிறுவன் மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக  கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை மல்லாவி  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இதேவேளை கடந்த நான்கு நாட்களுக்கு முன்னரும் பாண்டியன்குளம் பிரதேசத்தில் இவ்வாறு பாதுகாப்பற்ற மின்சாரத்தில் சிக்குண்டு ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.