(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பாரிய இலஞ்ச ஊழல் மற்றும் குற்றங்கள் குறித்து ஆராய நீதி அமைச்சர் மூலமாக விசேட நீதிமன்றம் ஒன்றினை அமைத்த காரணத்தினால் தான் கடந்த ஒக்டோபர் மாதம் அரசியல் குழப்பம் ஒன்றினை ஏற்படுத்தினர். குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டும் என்ற தேவை ஒரு சிலருக்கு இருந்தது என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார். 

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் விக்கினேஸ்வரன் உள்நுழைந்தால் இலகுவாக எதனையும் செய்துகொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை விசாரணை ஆணைக்குழுக்கள் திருத்த சட்டமூலம் மீதான விவாதத்தின் போது  உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.