(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தினமொன்றுக்கு 1000 ரூபா அடிப்படை சம்பளம் என்ற கோரிக்கையை வென்றெடுப்பதற்காக 1000 ரூபா இயக்கம் " என்ற அமைப்பினால் நாளை நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கபடவுள்ளதாக குறித்த இயக்கம் தெரிவித்துள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்கள், மலையக அரசியல்வாதிகள், முதலாளிமார் சம்மேளனம் மற்றும் இந்த விடயத்தில் பராமுகமாக செயற்படும் அரசாங்கம் ஆகிவற்றுக்கு அழுத்தத்தை பிரயோகிக்கும் முகமாகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

1000 ரூபாவிலும் குறைந்த சம்பளத்திற்கு தொழிற்சங்கங்கள் கைச்சாத்திடுமாக இருந்தால் தோட்டங்கள் மேலும் உக்கிரமடையும் எனவும் இவ் அமைப்பு எச்சரித்துள்ளது. 

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம்;நாளை நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் 

கொழும்பு, மருதானையில் அமைந்துள்ள சமூக மற்றும் மத மத்திய நிலையத்தில் 1000 ரூபா இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.