போதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக இன்று பகல் 2.00 மணியளவில் மஸ்கெலியா  சென்.ஜோசப் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரி அமில ஆரியரத்னவால் முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வில் வித்தியாலய அதிபர் எஸ்.பி.பரமேஸ்வரன் காவல் நிலைய உத்தியோகஸ்தர் நித்தியராஜ் வலய உதவி பணிப்பாளர் சுரேந்திரன் ஆகியவர்கள் கலந்துகொண்டனர்..

நிகழ்வில் உரையாற்றிய பொது சுகாதார அதிகாரி இலங்கை நாட்டின் சகல பாடசாலைகளின் மாணவர்களை இலக்கு வைத்து போதை பொருள் பாவனையை புகுத்தி வருகின்றனர். அதற்கு என்றும் நாம் அடிமையாகக் கூடாது. இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப்பொருளை இந்நாட்டில் இருந்து முற்றாக அழித்தொழிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.

அதன்படி போதைப்பொருள் விற்பனை செய்வோர், போதைப்பொருள் கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதுடன் தூக்கு தண்டனையும் வழங்கவுள்ளதாக ஜனாதிபதி வாக்களித்துள்ளார்.

இவ்வாறான காலகட்டத்தில் நாம் பாடசாலைக்கு முறையாக வந்து கல்வி பயின்று செல்வதையும் எமது ஆசான்களுக்கும் பெற்றோர்களுக்கும் நாட்டின் நல்ல பிரஜையாக வாழ வழிசெய்ய வேண்டுமென்றார். பொதுச்சுகாதார அதிகாரி அமில ஆரியரத்ன மற்றும் வலய உதவி பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில் எமது ஹட்டன் வலயத்திற்குட்பட்ட 37 பாடசாலைகள் உள்ளன. 

இப்பாடசாலைகளில் தற்போதைய வலய பணிப்பாளர் ஸ்ரீதரனின் வேண்டுகோளுக்கிணங்க கல்வியே நோக்கு என்ற வேலைத்திட்டத்தின் கீழ் தரம் 1 முதல் க.பொ.தா. உயர்தரம் வரையுள்ள பாடசாலைகளில் கல்விபயிலும் மணவர்களுக்கு இயன்றளவு அவர்கள் கல்வி தகமையை உயர்த்தும் நோக்கில் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்.