எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக கே.பீ. ஹர்ஷ விஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக நியமிக்கப்பட்டள்ள கே.பீ. ஹர்ஷ விஜயவர்தன, இலங்கை  நிர்வாக சேவையில் கடந்த 20 வருடங்களாக பணிபுரிந்துள்ளார்.

கடந்த 1998 முதல் 2001 ஆண்டு வரை அமைச்சகத்தின் உதவிசெயலாளராக பணிபுரிந்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ  பிரதமராக இருந்த 2001 முதல் 2005 வரையான காலத்தில் கே.பீ. ஹர்ஷ விஜயவர்தன உதவி செயலாளராக பணிபுரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.