(இராஜதுரை ஹஷான்)

தேர்தல்  எப்போது  நடத்த  வேண்டும்   என்று   தீர்மானிக்கும்  உரிமை  ஐக்கிய  தேசியக்  கட்சிக்கு   கிடையாது. ஜனாதிபதி  தேர்தல்  எப்போது  நடத்த வேண்டும் என்று  அரசியலமைப்பில்  குறிப்பிட்டதற்கமைய    ஜனாதிபதி தேர்தல்  இடம்பெறும்.

அதற்கு  முன்னர்   ஜனாதிபதி தேர்தலை  நடத்த வேண்டும் என்று  ஜனாதிபதி கருதினால் மாத்திரமே தேர்தலை  நடத்த முடியும் என  பாராளுமன்ற   உறுப்பினர்  அனுர  பிரியதர்ஷன யாப்பா  தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன  முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில்  இன்று இடம்பெற்ற  ஊடகவியலாளர்  சந்திப்பில்   கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம்  மக்களின்  தேவைகளை  அறிந்து   நாட்டை நிர்வகிக்க   வேண்டும்.  கடந்த  அரசாங்கத்தில்  மக்கள் தேர்தல்   உரிமையினை பெற்றுக்கொள்வதற்காக  வீதியில் இறங்கி போராடும் நிலைமை   காணப்படவில்லை.  

ஆகவே  அரசியல்  மற்றும்  பொருளாதார  பிரச்சினைகள் அனைத்திற்கும் தேர்லின் ஊடாகவே  நிரந்தர தீர்வினை  பெறமுடியும். ஆகவே மாகாணசபை தேர்தலை நடத்த பல்வேறுப்பட்ட அமைப்புக்கள் முன்னெடுக்கின்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் பொதுஜன பெரமுன முன்னணியினர் என்ற அடிப்படையில் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என்றார்.