பொது நிறுவனங்கள் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் (கோப்பு குழு) தலைவராக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆளும் - எதிர்க்கட்சி உறுப்பினர்களின்  ஆதரவுடன்  கோப் குழுவின்  தலைவராக மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

தேசிய அரசாங்கத்தின் ஆட்சியில் மூன்றவது தடவையாகவும் அவர் கோப் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நல்லாட்சி அரசாங்கத்தில் கடந்த இரண்டு தடவைகள் கோப் குழுவின் தலைமை பதவிக்கு ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவு செய்யப்பட்டிருந்தார். 

கடந்த அரசியல் நெருக்கடிக்கு பின்னர் பாராளுமன்ற குழுக்கள் நியமிக்கப்படாது இருந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் கோப் ( அரச நிறுவனங்கள் தொடர்பான கணக்குக் குழு) புதிதாக நியமிக்கப்பட்டது. இந்த குழுவிலும் மீண்டும் சுனில் ஹந்துநெத்தி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆளும் -எதிர் கட்சிகளின் ஆதரவில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.