2018 ஆம் ஆண்டுக்கான 11 பேர் கொண்ட டெஸ்ட் டெஸ்ட் கனவு அணியினை ஐ.சி.சி. வெளியிட்டுள்ள நிலையில் தற்போது 11 பேர் கொண்ட ஒருநாள் அணியையும் ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

இந்த 11 பேர் கொண்ட அணியில் ஆப்பானிஸ்தானின் சூழல்ப் பந்து வீச்சாளரும் சலகதுறை ஆட்டக்காரருமான ரஷித் கான் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

அதன்படி விராட் கோலி தலைமையிலான இந்த ஒருநாள் அணிக் குழாமில் ரோகித் சர்மா, ஜோனி பேயார்ஸ்டோ, ஜோ ரூட், ரோஷ் டெய்லர், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், முஸ்தபிசுர் ரஹ்மான், ரஷித் கான், குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஐ.சி.சி.யின் வளர்ந்து வரும் வீரருக்கான விருது ரிஷப் பந்த்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் சிறந்த செயல்திறன் கொண்ட வீரருக்கான விருதை அவுஸ்திரேலிய அணியின் ஆரோன் பின்ச் வென்றுள்ளார். 

இவர் கடந்த ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் 76 பந்துகளில் 16 பௌண்டரி 10 சிக்ஸர் விளாசி 172 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தமையும் குறிப்பிடத்தக்கது.