(எம்.மனோசித்ரா)

இராஜகிரிய விஷேட அதிரடிப்படை படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 1695 போதை மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று  கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேகநபர் 34 வயதுடைய, ரத்நாயக்க மாவத்தை, பெலவத்தை பத்தரமுல்லையை சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இவர் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

 எனினும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்காண்டு வருகின்றனர்.